வசந்தம் பிலிம்ஸ் வழங்கும் "பயமா இருக்கு"

Wednesday, October 28, 2015









இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட நகைச்சுவை கலந்த திகில் திரைப்படம். இப்படத்தில் சந்தோஷ், ரெஷ்மி மேனன், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், விஜய் டிவி ஜெகன், லொள்ளு சபா ஜிவா, பரணி போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும், இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்து கொண்டிருக்கிறது.



நாயகி ரேஷ்மி மேனன் கை குழந்தைக்கு அம்மாவாக இப்படத்தில் நடித்திருக்கிறார். திருமணமான பின்பு கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலை யதார்த்தமாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார்கள் சந்தோஷ் மற்றும் ரேஷ்மி மேனன்.





இப்படத்தில் வரும் வீடு படத்தில் முக்கிய பங்காற்றுகிறது, கேரளாவிலுள்ள இந்த வீட்டிற்கு செல்ல தரைவழி போக்குவரத்து கிடையாது, கிட்டத்தட்ட படகில் 3 மணி நேரம் பயணம் செய்தால்தான் படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கே செல்ல முடியும், அந்தளவுக்கு சிரமப்பட்டு படத்தை எடுத்திருக்கிறோம்.

மேலும் நான் கடவுள் ராஜேந்திரனை இப்படத்தில் முற்றிலும் வேறுவிதமாக பார்க்கப்போகிறீர்கள். நடிப்புக்கு தீணி போடும் விதமாக அவரின் கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை கதாநாயகன், கதாநாயகியுடன் இவர் டிராவல் செய்து கொண்டே இருப்பார். கோவை சரளா சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார் இவரின் சிஷ்யனாக சேஷு நடித்துள்ளார்.



இப்படத்தின் புதுமுக இயக்குநர் P.ஜவஹர், ஒளிப்பதிவாளர் மகேந்திரன், இசை - C.சத்யா, படத்தொகுப்பு கோவிந்தராஜன், கலை - காளிமுத்து, பாடல்கள் - விவேகா மற்றும் நோலன்.
Share on :

No comments:

Post a Comment